சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான மனுவொன்றையும் இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் கையளித்துள்ளது.
குறித்த மனு, ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் சிவஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்களால் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கு தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறே இந்த மனுவின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான அரச தலையீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சிவராசா அனோஜன் தொடர்பான விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
